நடிகர் அஜித் பள்ளி மாணவனாக நடித்த முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா.?

நடிகர் அஜித்குமார் தொடர்ந்து அண்மை காலமாக வெற்றி படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் துணிவு. இந்த படத்தை இயக்குனர் ஹச். வினோத் இயக்கி உள்ளார்.

போனி கபூர் மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.  இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதாம்.. இதனால் இந்த படத்தில் ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் சீன்கள் அதிகம் இடம் பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் உடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார்..

மற்றும்  இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, அஜய், ஜான் கொக்கன் போன்ற  பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் பட குழு அடுத்ததாக போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறதாம்.

படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது.  அஜித்தின் துணிவு திரைப்படத்தை எதிர்த்து விஜயின் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தை பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது அஜித் திரை உலகில் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் அவர் பள்ளி மாணவனாக நடித்த திரைப்படங்கள் ரொம்பவும் குறைவு அதுவும் ஆரம்ப காலகட்டத்தில் இவர் தமிழில் முதலில் பள்ளி மாணவனாக நடித்த திரைப்படம் என் வீடு என் கணவர் திரைப்படம். இதுதான் தமிழில் நடிகர் அஜித்திற்கு முதல் படமும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment