விஜய் டிவியில் பிரியங்காவிற்கு பதிலாக சிவாங்கி எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் தெரியுமா.? இதோ அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோ.!

0

விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் பல பிரபலங்களும் தற்போது நிறைய திரைப்பட வாய்ப்புகள் மற்றும் நிறைய நிகழ்ச்சிகளை கைப்பற்றி பங்கேற்று வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் விஜய் டிவி தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் தான் பிரியங்கா இவர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று கூட கூறலாம்

அந்த அளவிற்கு இவர் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் மேலும் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதால் இவர் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க முடியாத நிலையில் இருக்கிறார்.ஆனால் இவர் இடத்திற்கு யார் வருவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் குக் வித் கோமாளி சிவாங்கி பிரியங்கா விட்டுச்சென்ற நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்குவதாக தகவல் கிடைத்தது.

ஆனால் பிரியங்கா விட்டு சென்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தான் சிவாங்கி தொகுத்து வழங்குவதாக தகவல் கிடைத்தது ஆனால் அது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதும் நமக்குத் தெரிந்ததுதான் தற்பொழுது சிவாங்கி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாரா என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஆம் சிவாங்கி காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் அந்த நிகழ்ச்சியை முன்பு ரக்ஷன் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்கள் தற்போது பிரியங்காவிற்கு பதிலாக இதில் சிவாங்கி வந்துள்ளது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இதற்கான ப்ரோமோ வீடியோ கூட வெளியாகி மக்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படிப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கிடைத்து விட்டதா என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.