TRP யில் செம்ம மாஸ் காட்டும் சீரியல்கள் இந்த வாரத்தில் முதல் இடத்தில் எது தெரியுமா.? என்னடா சொல்லுறிங்க இப்பவும் இதுதானா.?

சினிமாவில் எப்படி சண்டை போட்டுக்கொண்டு படங்களை வெளியிடுகிறார்களோ அதுபோல சின்னத்திரையிலும் இதுபோன்ற போட்டிகள் நடக்கின்றன அந்த வகையில் எந்த டிவி சிறப்பான நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை வழங்கி டிஆர்பி யில் முன்னேறம் அடைகின்றனர்.

அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி,  ஜீ தமிழ் போன்ற சேனல்கள் முன்னிலையில் இருப்பதால் அவ்வப்போது மோதிக் கொள்வதும் வழக்கம் இவர்கள் மூன்று டிவிகளில் யாராவது ஒருவர் முதலிடத்தையும் கைப்பற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.

சின்னத்திரை தொலைக்காட்சியில் பல்வேறு விதமான சீரியல்கள் வெளிவந்து மக்களை வெகுவாக கவர்கின்றன அந்த வகையில் முந்தின வாரத்தில் வெளியான டிஆர்பி லிஸ்டில் ரோஜா சீரியல் தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருந்தது.

அது போலவே இந்த வாரத்திலும் “ரோஜா” சீரியல் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது இரண்டாவது இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகும் “வானத்தைப்போல” மூன்றாவது இடத்தில் ஸ்டார் விஜய் “பாரதிகண்ணம்மா” நான்காவதாக சன் டிவி கருப்பன் ஐந்தாவதாக ஸ்டார் விஜய் “பாக்கியலட்சுமி” போன்ற தொடர்கள் தான் டாப்-5 இடத்தில் இருக்கின்றன.

சின்னத்திரையில் நல்லதொரு சீரியல்களை தற்போது கொடுத்துக் கொண்டிருப்பது சன்டிவி அதிலும் ரோஜாசீரியல் சிறப்பாக இருப்பதால் அது TRP யில் சன் டிவியை உச்சத்திற்கு எடுத்து சென்று வைத்து அழகு பார்க்கிறது.

Leave a Comment