முன்னணி நடிகையாக வளம் வரும் இவர்கள் முதன் முதலில் எந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் தெரியுமா.?

சினிமாவில் பல நடிகைகள் நடித்து வருகின்றனர். இருப்பினும் தற்போது அவர்கள் எந்த படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. அப்படி தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த 10 நடிகைகளின் முதல் படத்தைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

சமந்தா:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவர் அறிமுகமான முதல் படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா இந்த படத்தில் இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு கதாநாயகியாக பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

நயன்தாரா:- லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருபவர் நடிகை நயன்தாரா இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த தற்போது தனக்கான ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த முதல் படம் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் சரத்குமார் அவர்கள் இரண்டு வேடத்தில் நடித்துள்ளார்.

திரிஷா :- இவர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி என்ற திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சினிமாவில் அறிமுகமானார் ஆனால் இவர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

கீர்த்தி சுரேஷ்:- இவர் சினிமாவில் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தாலும் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

ஜோதிகா:- நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா திருமணதிற்கு பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார்.

பிரியங்கா மோகன்:- இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் அறிமுகமான முதல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

தமன்னா :- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை தமன்னா இவருக்கு தற்போது அதிக பட வாய்ப்பு இல்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தமிழில் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ராஷ்மிகா மந்தண்ணா :- இவர் தெலுங்கு கன்னடா முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ராஸ்மிகா மந்தண்ணா. அதன் பிறகு நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுல இருக்கு அறிமுகமானார்.

அனுஷ்கா செட்டி :- தெலுங்கில் சூப்பர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அனுஷ்கா செட்டி இவர் தமிழில் ரெண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஹன்சிகா மோத்வானி :- இவர் ஆரம்பத்தில் ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருந்தாலும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அதுமட்டும் இல்லாமல் அந்த ஆண்டு வெளியான வேலாயுதம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment