சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்.! உச்சகட்ட சந்தோஷத்தில் சிம்பு நடிகர்கள்.!

நடிகர் சிம்பு தனது திரைப்பயணத்தில் அடுத் அடுத்ததாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து முடித்த கையோடு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மாநாடு திரைப்படத்திற்கான சூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை நாம் பார்த்தோம்.

இதனையடுத்து சிம்பு அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது சிம்பு கடந்த 2012ஆம் ஆண்டு போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து போடா போடி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்பு நடிக்க உள்ளாராம்.

இந்த திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை ரித்திகா பால் நடிக்கவுள்ளாராம் அதுமட்டுமின்றி போடா போடி திரைப்படத்தை தயாரித்த குமார் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்க இருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

தற்போது இந்த தகவல் சிம்புவின் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.

simbu
simbu

Leave a Comment