நடிகர் அஜித்துக்கு ரொம்பவும் பிடித்த பாடல் எது தெரியுமா.? அவுங்க குடும்பமே ரிங்டோனாக வைத்திருந்ததாம்..!

0
ajith
ajith

நடிகர் அஜித் குமார் இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் போனி கபூர் தயாரித்துள்ளார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது ஆனால் படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

அந்த படத்தை நயந்தாராவின் காதல் கணவரான விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். அஜித் படங்களில் பெருமளவு பாடல்கள் இருக்காது அப்படி இருந்தாலும் அந்த பாடல்கள் ஒன்னு ரெண்டும் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிடும் அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், விசுவாசம், வேதாளம் போன்ற பல படங்களில் பணியாற்றினர்.

குறிப்பாக முதல் படமான வீரம் படம் அப்பொழுது வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து போனது ஏன் அஜித்துக்கு கூட வீரம் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் ரொம்பவும் பிடித்திருந்தாம்..

அந்த பாடல் வேறு எதுவும் அல்ல.. ரத கஜ துராதைகள் பாடல் தானாம் இந்த பாடல் ரெக்கார்டிங் சமயத்தில் அஜித் அங்கு வந்திருக்கிறார் அந்த பாடலைக் கேட்டு மிகவும் பாராட்டினாராம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எனவும் சொன்னாராம் பிறகு என் குடும்பத்தினர் அனைவரும் இந்த பாடலை ரிங்டோனாக வைத்து விட்டனர் என்றும் கூறி மகிழ்ச்சியடைந்தார் அஜித்..