வலிமை படத்தை தொடர்ந்து போனிகபூர் அடுத்து எந்த ஹீரோவை வைத்து படத்தை தயாரிக்கப் போகிறார் தெரியுமா.? முழு விவரம் இதோ.

poni kapoor and ajith
poni kapoor and ajith

ஹிந்தி சினிமாவில் பல்வேறு ரீமேக் படங்களை தயாரித்து தனது பெயரை பிரபலப்படுத்தி கொண்டவர் தயாரிப்பாளர் போனி கபூர். இவர் தயாரித்த பல்வேறு திரைப்படங்களில் சூப்பர் ஹிட்டாகி உள்ளன ஹிந்தியில் இப்படி ஓடிக்கண்டிருந்த இவர் நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டபின் தமிழ் சினிமா பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

ஒரு கட்டத்தில் அஜீத்தை சந்தித்து பேசி உள்ளனர் அப்பொழுது நாம் இருவரும் இணைந்து படம் பண்ண வேண்டும் என பேசிக்கொண்டனராம் அது ஒருவழியாக நிறைவேறியது நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் மூலம் அஜித்துக்கு போனி கபூரும் இணைந்தனர் அதன் பின் ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக அஜித் கூட்டணி அமைத்து வலிமை என்ற  திரைப்படத்தையும் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் போனிகபூர் அவர்கள் தயாரித்துள்ளார்.

வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக போனி கபூர் எந்த ஹீரோவை வைத்து படத்தை தயாரிப்பார் என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக் குறியில் இருந்து வந்த நிலையில் அதற்கான பதிலும் கிடைத்துள்ளது.

ஹிந்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான ஆர்டிகல் 15 திரைப்படத்தின் ரீமேக் தமிழில் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்திற்கு “நெஞ்சுக்கு நீதி” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த திரைப் படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடிகையாகிறார் இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் இந்த படத்தை அருண் காமராஜ் இயக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது 44வது பிறந்த நாளை கொண்டாடினார் அப்போது அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய சில பரிசுகளை கொடுத்திருந்தார் போனிகபூர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

poni kapoor and udhaya nithi stalin
poni kapoor and udhaya nithi stalin