தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி படிப்படியாக தனது திறமையை வெளிக்காட்டி இதன் மூலம் ஒரு கட்டத்தில் ஹீரோ, வில்லன் என நடிக்க ஆரம்பித்தார். இது அவருக்கு பேரையும் புகழையும் பெற்றுத் தந்ததால் தற்போது தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளார்.
விஜய் சேதுபதிக்கு போதாத குறைக்கு தெலுங்கு படத்திலும் இவரது மார்க்கெட் அதிகரித்து உள்ளது. இந்த காரணங்களால் விஜய் சேதுபதி தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளார். இருப்பினும் இவர் மேல் நம்பிக்கை வைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு பட வாய்ப்பை அள்ளி கொடுத்து உள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் விஜய் சேதுபதியின் அடுத்த அடுத்த திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் பெரிய அளவு வசூல் வேட்டை இல்லை. இதனால் விஜய் சேதுபதி மீது விமர்சனம் அதிகமாகி கொண்டே இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படம் வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தை மறைந்த இயக்குநர் எஸ்பி ஜெகநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் கிருஷ்ண ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து மோகன்ராஜா, மகிழ்திருமேனி கரு, பழனியப்பன், மேகா ஆகாஷ், ரித்திகா மற்றும் விவேக் போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்த படம் சர்வதேச பிரச்சினைகளை எடுத்துரைக்கும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.