ஏகே 62 திரைப்படத்தை தொடர்ந்து 63வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார் தெரியுமா.? இவர் வந்தாலே பதறுவாங்களே..

தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் அஜித் இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை கடந்து தான் தற்பொழுது நிறைய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் மேலும் இவருக்கு நிறைய சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கை கொடுத்திருந்தாலும்.

இவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் தோல்வி திரைப்படங்களை கொடுத்து தான் பின்பு ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து பார்த்து நடித்து வந்தார்.அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மக்களிடையே பேராதரவை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டது துணிவு திரைப்படத்தை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அதித் கூட்டணி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது ஆரம்பிக்கும் என்பது பற்றி தெரியவில்லை இருப்பினும் ரசிகர்கள் பலரும் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் கொடுங்கள் என போஸ்டர் வரை சென்று விட்டார்கள் அதிலும் குறிப்பாக லைக்கா நிறுவனத்திடம் நாள்தோறும் கேட்டு வருகிறார்கள்.

இதற்கே விடை தெரியாமல் இருக்கும் பட்சத்தில் தற்பொழுது அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை அடுத்து அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார் என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது அதாவது நடிகர் அஜித்துடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் பணியாற்றிய இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் அஜித்தின் 63 வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ajith
ajith

மேலும் இவர் அஜித் உடன் இணைந்து வீரம்,வேதாளம்,விவேகம்,விஸ்வாசம் போன்ற ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் இதனை தொடர்ந்து இவர் அஜித்தின் 63வது திரைப்படத்தில் பணியாற்றுவாரா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை ஆனால் இந்த தகவலை அறிந்த ரசிகர்களுக்கு ஒரு சிறிதளவு மகிழ்ச்சி என ஒரு சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Comment