இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் யார் தெரியுமா.? நூல் இழையில் தப்பிய மகேஸ்வரி

0
bigboss
bigboss

வெள்ளித்திரை எப்படி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர புது புது படங்களை வெளியீடு கவர்ந்து இருக்கிறதோ அதேபோல சின்னத்திரை தொலைக்காட்சிகளும் புதிய புதிய ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை கொடுத்து வருகிறது அதிலும் குறிப்பாக விஜய் டிவி ரசிகர்களை எப்படி எல்லாம் ரசிகர்களை கவர முடியுமோ அதற்கான வேலைகளை செய்யும்..

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக கொடுத்து வருகிறது. அப்படி தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசன் அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டு சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஆரம்பத்தில் கலக்கிய ஜி பி முத்து சில காரணங்களால் கமலிடம் சொல்லிவிட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். மற்றவர்கள் நாமினேஷன் செய்யப்பட்டு வெளியேறினர். அந்த வகையில் கடைசி வாரத்தில் ஷெரினா மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார் அவரை தொடர்ந்து இந்த வாரமும் எலிமினேஷன் ரவுண்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் அசிம், ஆயிஷா, விக்ரமன், தனலட்சுமி, ராம், ஏடிகே போன்றவர்கள் இடம் பெற்றுள்ளன. இதிலிருந்து குறைந்த ஓட்டுகளை வாங்கும் நபர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் அந்த வகையில் இப்பொழுது வரையிலும் குறைந்த ஓட்டுகளை வாங்கியிருப்பது ராம் என தெரிய வருகிறது.

இவர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததிலிருந்து பெரிதாக ஆர்வம் காட்டாமல் தான் உண்டு தான் வேலை உண்டு என இருக்கிறார் இதனால் மக்கள் மத்தியில் ஆர்வம் இல்லாத நபராக தெரிய வருகிறார் அதனால் தான் இவர் குறைந்த ஓட்டுகளை வாங்கி இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.