டாப் ஹீரோக்களின் ஷூட்டிங் எங்கு நடத்தப்படுகிறது தெரியுமா.? வெளிவந்த சுவாரசிய தகவல்..

சினிமா உலகில் இருக்கும் ஹீரோக்களின் மிகப்பெரிய ஆசை என்னவென்றால் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் மற்றும் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் நடிகர் கூட அதை தக்க வைத்திருக்க தொடர்ந்து ஓட வேண்டும் அப்படி தான் தற்பொழுது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும்..

நடிகர்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் அனைத்து டாப் நடிகர்களுமே சூப்பராக நடித்து வருகின்றனர். ரஜினி ஜெயிலர் , அஜித் துணிவு, விஜய் வாரிசு, கமல் இந்தியன் 2 என அனைவரும் படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் டாப் நடிகர்களின் படங்கள் எங்கே இப்பொழுது ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அது குறித்து விலாவாரியாக தற்போது நாம் பார்ப்போம். 1. நடிகர் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் திருப்பதியில் நடக்கிறது.

2. சூப்பர் ஸ்டார் ரஜினி நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் சென்னையை சுற்றி ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறதாம். 3. தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பு எண்ணூர் பகுதிகளில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 4. நடிகர் அஜித்தின் 61 வது திரைப்படமான துணிவு படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் பாங்காக் கில் நடத்தப்பட்டு வருகிறது.

5. சிறுத்தை சிவாவுடன் சூர்யா கைகோர்த்து தனது 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடத்தப்பட்டு வருகிறது. 6. தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறதாம் 7. சிம்புவின் பத்து தல சென்னையில் ஷூட்டிங் நடைபெறுகிறது.

Leave a Comment