மக்களோடு மக்களாய் கலந்த ரஜினி அதுவும் எந்த இடத்தில் தெரியுமா.? இதோ புகைப்படத்துடன்.!

0

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான் இவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகமாக வசூல் செய்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் இவர் தனது திரைப்படங்களை ரசிகர்களுக்கு மிகவும் தரமாக கொடுத்து வருகிறார் மேலும் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இவரது திரைப்பயணத்தில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வசூல் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும் இவரது நடிப்பில் எத்தனை திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனாலும் இவரும் ஒரு சில தோல்வி திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் ஆனாலும் கொஞ்சம் கூட பயப்படாமல் அடுத்தடுத்த திரைப்படங்களில் பார்த்துக்கொள்ளலாம் என யோசித்து பல திரைப்படங்களை தொடர்ச்சியாக நடித்து வந்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார்.

இவரது நடிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி உள்ளது ஆம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெரும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள் அண்மையில் ரஜினி தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவரது அடுத்த திரைப்படத்தை எப்பொழுது யார் எந்த இயக்குனர் இயக்குவார்  என பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

ரஜினி நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் கபாலி கடந்த 2016ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த திரைப்படம் முழுவதும் மலேசியாவில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

rajini870
rajini870

இந்நிலையில் மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினி மக்களோடு மக்களாய் ஒரு ஹோட்டலில் அமர்ந்திருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ரஜினி மிகவும் எளிமையாக இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.