அஜித் இப்போ எங்க நின்று போட்டோ எடுத்துக்கொண்டார் தெரியுமா.? ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

ajith
ajith

சினிமா உலகில் இருக்கின்ற நடிகர்கள் ஒரு படத்தை முடித்து விட்டு ஓய்வுக்காக வெளிநாடு மற்றும் கடற்கரை ஓரத்தில் ஓய்வு எடுப்பார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருப்பவர் தான் தல அஜித்.  ஒரு படத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து விட்டால் அடுத்த படத்திற்கு முன்பாக சிறிது ஓய்வு எடுப்பது வழக்கம்.

ஆனால் அது எப்படிப்பட்ட ஓய்வு என்றால் அதிலும் எதையாவது ஒன்றை செய்து அசத்துவது தான் இவரது வழக்கம் அந்த வகையில் இவர் துப்பாக்கி சுடுதல்,  ட்ரோன் இயக்குதல், பைக் ரேஸ், கார் ரேஸ், சமைத்தல் என எல்லாவற்றிலும் தனது ஆர்வத்தை காட்டி ஆசை.

இன்று வரையிலும் அஜித் அதை தான் பின்பற்று வருகிறார். தற்போது கூட அஜித் வலிமை திரைப்படத்தை முடித்து விட்டுள்ளார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அஜித் அடுத்த படத்தில் இணைவதற்கு முன்பாக தற்போது இந்தியாவைச் சுற்றி பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அண்மையில் தாஜ்மஹால் சென்றார் அதைத் தொடர்ந்து இந்திய எல்லையான வாகாவில் அண்மையில் அஜித் அங்கு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் மேலும் ராணுவ வீரர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார்.

அதை தொடர்ந்து தற்போது ranthambore நேஷனல் பார்க்கில் தல அஜித் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த க்யூட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ajith
ajith