ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் எப்பொழுது தெரியுமா.?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் துணிவு படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் துணிவு திரைப்படத்துடன் விஜயின் வாரிசு திரைப்படம் மோத உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளது இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மறைமுகமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த இரண்டு படத்திற்கும் சரிசமமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வாரிசு திரைப்படத்திலிருந்து அடிக்கடி அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் துணிவு படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் ரசிகர் கடும் சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்பத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் டிரைலர் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒன்றுடன் ஒன்று நேராக மோத உள்ளது இதனால் இந்த இரண்டு படங்களில் எந்த படம் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  விரைவில் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version