அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் ஆட்டம் ஆரம்பம்.! ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா.? இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

பல திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் மோகன் ஜி இவர் திரௌபதி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு கடந்த மாதம் முடிந்து உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷி தான் கதாநாயகனாக நடிக்கிறார் அது மட்டுமல்லாமல் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தர்ஷா குப்தா நடித்துள்ளார் இந்தத் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிபின் இசை அமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை ஜிஎம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என பல ரசிகர்களும் மிகுந்த ஆவலாக எதிர்பார்த்து வரும் நேரத்தில் இந்த திரைப்படத்தைப் பற்றி ஒரு புதிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது அதாவது ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரைலர் நாளை மாலை சரியாக ௦5.6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உடனே குஷி ஆகி விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் சாதனை படைத்து விட்டால் இயக்குனர் மோகன் ஜி தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தர்ஷா குப்தாவும் ரசிகர்களிடையே புகழ்பெற்று விலங்கிவிட்டால் இவரும் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது மேலும் இவர் காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment