சூர்யா 42வது படத்தின் டீசர் எப்போது தெரியுமா.? வெளியான அப்டேட்டால் உச்சகட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தை தற்காலிகமாக சூர்யா 42 என்று அழைத்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு முன்பு இயக்குனர் வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது அது மட்டுமல்லாமல் இந்தப் படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி எடுத்துக் கொண்ட வீடியோவும் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

ஆனால் அந்த நேரத்தில் நடிகர் சூர்யா அவர்கள் பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் வணங்கான் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. ஆனால் ஒரு சில மாதங்களில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சூர்யா அவர்கள் இந்த படத்தில் இருந்து வெளியேறினார் என்று சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் பாலா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா அவர்களுக்கு ஏற்ற கதை அமையவில்லை ஆகையால் இந்த படத்தில் இருந்து அவர் விலகுகிறார் என்று பாலா அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் இதனால் வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா அவர்கள் விலகியது உறுதியானது.

இதனை அடுத்து வணங்கான் படத்திற்கு பிறகு சூர்யா அவர்கள் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த நேரத்தில் சிறுத்தை சிவா இயக்கும் சூரியா 42 படத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி இருக்கிறது மேலும் இந்த திரைப்படம் 13 மொழிகளில் வெளியாக இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் சூரிய 42 திரைப்படத்தில் கிட்டத்தட்ட 10 கெட்டப்புகளில் நடிக்கிறாராம் சூர்யா. இந்த நிலையில் இந்த திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாகி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதாவது சூர்யா 42 வது திரைப்படத்தின் டைட்டில் டீசர் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது அதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment