ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த விஜயின் வாரிசு பட “டீசர்” – எப்போ ரிலீஸ் தெரியுமா.?

தளபதி விஜய் கடைசியாக இயக்குனர் நெல்சனுடன் கைகோர்த்து பீஸ்ட் எனும் திரைப்படத்தை கொடுத்தார். இந்த படம் வெளிவந்து கலவையான  விமர்சனத்தை பெற்று நல்ல வசூலை அள்ளியது. இதைத்தொடர்ந்து அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க விஜய் முதல் முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு.

என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார்.  இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து முதல் முறையாக ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார் மற்றும் குஷ்பூ, ஸ்ரீகாந்த், பிரபு, சரத்குமார், சங்கீதா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திலிருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து அண்மையில் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே.. பாடல் வெளியாகி மக்களிடையே வைரலாகி  வருகின்றன இந்த பாடல் வெளிவந்த சில நேரங்களிலே ரசிகர்கள் மத்தியில் செம டிரெண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது இந்தப் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படமும் பொங்கலை குறி வைத்து வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் இந்த இரண்டு படத்திற்கும் நல்ல போட்டி இருக்கும். இந்த நிலையில் வாரிசு படத்தின் டீசர் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகின்றன இதைத்தொடர்ந்து படத்தின் டிரைலர் புத்தாண்டை ஒட்டி வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment