அஜித்தின் வலிமை திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கோலாகலமாக உலக அளவில் வெளியானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் அஜித் படத்தை ரசிகர்கள் பார்க்க போவதால் பேனர் கட்டவுட் வைத்து அசத்தினர் மறுபக்கம் படம் வெளிவருவதற்கு முன்பாகவே..
வெடிகளை வெடித்தும், கேக் வெட்டியும், மேளதாளத்துடன் கொண்டாடினர். உள்ளே போன ரசிகர்களும் அஜித்தின் ஆக்சன், சென்டிமெண்ட் போன்ற சீனர்களைப் பார்த்து கொண்டாடி தள்ளினார் வலிமை திரைப்படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது முதல் நாளில் மட்டும் சுமார் 36 கோடி அள்ளிய நிலையில் அடுத்த நாளிலும் நல்ல வசூல் வேட்டையை அள்ளி வருகிறது.
இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் படத்துக்கு கலவையான விமர்சனத்தை கொடுப்பதால் மக்களின் வரவேற்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வலிமை படத்திற்கான வரவேற்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. வருகின்ற நாட்களில் நல்லதொரு வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் OTT தளத்திற்கு எப்போது மாறும் என்ற தகவலும் தற்போது கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வருகின்ற மார்ச் 25ஆம் தேதிக்கு OTT தளத்தில் வெளியாகி அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வலிமை படம் எங்கெல்லாம் ரிலீசாகிறது வாங்க எல்லாம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் அதுப்போல OTT தளத்தில் வெளியேறினாலும் மக்கள் ரசிகர்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.