ராட்சசன் 2 திரைப்படம் எப்பொழுது எடுக்கப்படும் தெரியுமா.! இணையத்தில் வெளியான அதிரடித் தகவல்.!

தமிழ் சினிமாவுலகில் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் பேசப்பட்டு வரும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தான் விஷ்ணு விஷால் இவருக்கு சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது இவரது புகைப்படங்கள் கூட சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

மேலும் விஷ்ணு விஷால் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற வைத்த திரைப்படம் தான் ராட்சசன் இந்த  திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அதிகப்படியாக சாதனை படைத்தது.

மேலும் இதில் அமலாபால்,வெங்கட்,காளி போன்ற பல முக்கியமான நட்சத்திரங்கள் நடிக்க இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் விஷ்ணு விஷால் நடித்த திரைப்படங்களிலேயே இதுதான் மிகச் சிறந்த திரைப்படம் என்று சொல்லும் அளவிற்கு இந்த படம் அவரை உயர்த்தி விட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் தமிழில் மட்டும் வெளியாகாமல் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சாதனை படைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை இரண்டாம் பாகம் இயக்கினால் மிகவும் நன்றாக இருக்கும் என கூறிவந்த நிலையில் சமீபத்தில் விஷ்ணு விஷால் ஒரு பேட்டி ஒன்றில் இந்த திரைப்படம் பற்றி கூறியுள்ளாராம்.

vishnu vishal 2
vishnu vishal 2

ஆம் அதில் இயக்குனர் ராம்குமார் தனுஷ் திரைப்படத்தை முடித்து விட்டு பின்பு ராட்சசன் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என கூறியதாக தகவல் வைரலாகி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment