AK 61 படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் எப்போ தெரியுமா.? அப்டேட்டை கொடுத்து அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்திய மஞ்சு வாரியர்.!

சினிமா உலகில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்தவர் அஜித் குமார் இருப்பினும் அண்மைக்காலமாக தனது ரசிகர்களின் மனநிலையை நன்கு புரிந்து கொண்டு சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த படங்களும் வெற்றியை பெறுகின்றன. அஜித் கடைசியாக நடித்த வலிமை படம் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

அதனை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித், மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் வீரா, சமுத்திரகனி, அஜய், மகாநதி சங்கர், யோகி பாபு, ஜான் கொக்கின் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

ஏகே 61 திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஏனென்றால் இந்த படம் ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து படம் உருவாகிறது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் உடல் எடையை குறைத்து இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பதால்..

இந்த படத்தில் நடித்து வரும் பலர் லடாக் பயணம் பைக் மூலம் போய்க்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அஜித் மலையாள நடிகை மஞ்சு வாரியார் மற்றும் பலர் பயணம் மேற்கொண்டுள்ளனர் அதன் புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் மலையாள நடிகை மஞ்சு வாரியர்..

ஓனம் பண்டிகையை முன்னிட்டு மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார் அப்பொழுது ஏகே 61 படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்கும் என கேட்டுள்ளனர் அதற்கு அவர் பதில் அளித்தது அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது என சொல்லி உள்ளார் இதனை எடுத்து அஜித் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

Leave a Comment