வலிமை திரைப்படத்தின் இறுதி படப்பிடிப்பு எப்பொழுது நடைபெற இருக்கிறது தெரியுமா.? இதோ இணையத்தில் வெளியான அதிரடி தகவல்.

0

தல அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாகவே கேட்டு வரும் விஷயம் என்றால் அது வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என பலரும் தீவிரமாக கேட்டு வருகிறார்கள் தல அஜித் பிறந்தநாள் முடிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது இன்னும் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவில்லை என பலரும் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

அஜித் திரைப்படத்தை மிக ஆவலுடன் எதிர்பார்ப்பது எதற்காக என்றால் தல அஜித் தனது ரசிகர்களுக்கு எந்த திரைப்படத்தில் நடித்தாலும் புரியும்படியாக ஒரு நல்ல கருத்தை கூறியிருப்பார் பொதுவாகவே இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் எனவும் ரசிகர்கள் பல கேள்விகளை சமூக வலைதளங்களில் கேட்டு வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக வாய்ப்பிருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் என்பது பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது வலிமை படத்தின் patch work ஷூட்டிங் ஹைதராபாத்தில் நான்கு நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த படப்பிடிப்பு வரும் ஜூலை 13ம் தேதி முதல் ஆரம்பித்து ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என தகவல் கிடைத்துள்ளது.

ajith2
ajith2

இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த தல அஜித் ரசிகர்கள் பலரும் இப்பொழுது தான் எங்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது ஆனால் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சீக்கிரமாக வெளிவந்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.