பிரபல நடிகர் பிரேம்ஜிக்கு எப்பொழுது திருமணம் தெரியுமா.? இதோ அவரது தந்தை சொன்ன புதிய தகவல்.

0

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா உலகில் வலம் வந்த பல நடிகர்களும் திருமணம் செய்யாமல் இருந்த நிலையில் திடீரென பலரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்கள் அந்த வகையில் பார்த்தால் பல காமெடி நடிகர்களும் திருமணம் நடைபெறாமல் வருத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது.

அந்த வகையில் பார்த்தால் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக வலம் வருபவர் தான் பிரேம்ஜி இவர் மங்காத்தா திரைப்படத்தில் மச்சி ஓப்பன் த பாட்டில் எனக் கூறும் வசனம் தற்போது வரை ரசிகர்களால் மறக்க முடியாது அந்த அளவிற்கு இவர் அந்த திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார்.

பிரேம்ஜி தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வலம் வந்தாலும் இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறாமல் இருக்கிறது அவரது தாயார் மறைந்ததை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார் இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான கங்கை அமரன் அவர்கள் பிரேம்ஜி திருமணம் குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளாராம்.

அதில் அவர் கூறியது என்னவென்றால் பிரேம்ஜிக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என அவரது தாயார் மிகவும் ஆசை பட்டதாகவும் ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது எனவும் தெரிவித்துள்ளார் அதோடு அவரது முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிக்கு பிறகு பிரேம்ஜியின் திருமணம் நடைபெறும் என கூறி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார்.

premji2
premji2

பிரேம்ஜி அவரது தாயாரைப் பற்றி நினைப்பது மட்டுமல்லாமல் எனது தாயாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.இதனைத்தொடர்ந்து இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் இவர் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அதுதான் எங்களது ஆசை என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.