பிரபல முக்கிய 0TTதளத்தில் வெளியாகும் வித்தியாசமான கதை களம் கொண்ட கே எஸ் ரவிக்குமாரின் திரைப்படம் எப்போது வெளியாக உள்ளது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தனது திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற வேண்டும் என்பதற்காக வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் ஒரு முக்கியமான இயக்குனர்தான் கேஎஸ் ரவிக்குமார் இவர் அந்த காலத்திலேயே பல வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்குவது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப் படங்களில் வில்லனாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் கேஎஸ் ரவிக்குமார் தற்போது நடித்துவரும் திரைப்படம் தான் மதில்.

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார் இந்த படத்தை எஸ் எஸ் குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார் மேலும் மதில் திரைப்படத்தில் பிக் பாஸ் மதுமிதா,மைம் கோபி,காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் முக்கிய பிரச்சனைகளை தட்டித்தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைகிறது என்று தகவல் கிடைத்துள்ளது மேலும் 2020இல் ஜி5 தளத்தில் வெளியான கா.பெ ரண சிங்கம்,முகிலன்,லாக்கப் போன்ற படங்களை அடுத்து தற்போது இந்த திரைப்படமும் வெளியாக உள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளதால் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி அன்று ஜி5 தளத்தில் வெளியாக உள்ளது என தற்போது தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து இந்த தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

k.s.ravikumar
k.s.ravikumar

Leave a Comment