குக் வித் கோமாளி சீசன் 3 எப்பொழுது தொடங்க உள்ளது தெரியுமா.? உண்மையை உளறிய புகழ்

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களில் மூலம் கலந்து கொண்ட பலருக்கும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சியின் முதல் சீசனை விடவும் இரண்டாவது சீசன் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதற்கு முக்கிய காரணம் இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சி என்றாலும் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து ஒளி பரப்பி வருவதால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

அதோடு இந்நிகழ்ச்சியில் கோமாளிகளான புகழ்,பாலாஜி,சிவாங்கி உள்ளிட்ட இன்னும் பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து அதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளார்கள் கோமாளிகளை தொடர்ந்து அஸ்வின், தர்ஷா குப்தா,பவித்ரா, உள்ளிட்டோரும் திரைப்படங்களில் நடிக்க உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவடைந்தது. எனவே ரசிகர்களும் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்காக காத்து வருகிறார்கள். எனவே இதனைப் பற்றி தற்போது புகழ் கூறியுள்ளார்.

அந்தவகையில் மூன்றாவது சீசனில் முதல் இரண்டு சீசன்களில் இருந்த கோமாளிகள் தான் தற்பொழுது இருக்கிறார்கள் என்றும் புதிதாக குக்குகள் அறிமுகமாவார்கள் என்றும் வாரத்திற்கு ஒரு நாள் தான் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் கூறியுள்ளார்.

தற்பொழுது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் பல இளம் நடிகர் ,நடிகைகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Comment