அஜித்தின் பழைய படத்தை விலை கொடுத்து வாங்கிய கலர்ஸ் தமிழ் எப்பொழுது ஒளிபரப்பாகிறது தெரியுமா.?

தல அஜித் திரைப்படங்கள் என்றாலே இவரது ரசிகர்கள் அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு தான் மற்ற வேலைகளை செய்வார்கள் அந்த வகையில் பார்த்தால் ஊரடங்கு நேரத்தில் தல அஜித் திரைப்படம் எப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் தல அஜித் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என பலரும் சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள் இந்நிலையில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழுவினர்கள் கூறி வந்த நிலையில் ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்து விட்டார்கள்.

தல அஜித் திரைப்படம் என்றால் இவரது ரசிகர்கள் பார்ப்பதற்கு மிக ஆவலுடன் வருவது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாக தல அஜித்தின் பழைய படங்கள் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தல அஜித் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு முரளி,அப்பாஸ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் ராசி இந்த திரைப்படத்தை பற்றி தான் தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஆம் அந்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலர்ஸ்-தமிழ் வாங்கியுள்ளார்களாம் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இன்று இரவு 7 மணி அளவில் ஒளிபரப்பாக இருக்கிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமா என்பது தெரியவில்லை.

ajith5
ajith5

மேலும் தல அஜித் வலிமை திரைப்படத்தை அடுத்து எந்த இயக்குனருடன் கைகோர்க்க உள்ளார் என்பதும் தெரியவில்லை இதனைப் பற்றியும் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment