ஹீரோயின்னாக நடிப்பதற்கு முன்பாக தேவயானி செய்து வந்த வேலை என்ன தெரியுமா.? சொன்னா ஷாக்காவீர்கள்.

சினிமா உலகில் எடுத்தவுடனேயே நடிகைகளாக வலம் வருவது மிக கஷ்டம் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகைகள் பலரும் ஆரம்ப காலகட்டத்தில் குணசித்திர கதாபாத்திரங்களில் அல்லது வேறு ஏதோ ஒரு வகையில் சினிமா உலகில் ஒரு மூளையில் பயணித்துக்கொண்டு இருப்பார்கள்.

பின் படிப்படியாக தனது திறமையை வளர்த்துக் கொண்டு மக்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடிப்பார்கள். அந்த வகையில் நடிகை தேவயானியை நாம் ஒரு நடிகையாக தான் பார்த்து இருக்கிறோம் ஆனால் இவர் ஹீரோயினாக ஆவதற்கு முன்பாக பல்வேறு படங்களில் இவர் ஐட்டம் டான்சராக தான் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்களில் கிளாமராக இருப்பது மற்றும் டான்ஸ் போன்றவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தேவயானிக்கு தங்கர்பச்சான் உதவி செய்துள்ளாராம் கேமராமேனாக இருந்த தங்கர்பச்சான் காதல் கோட்டை திரைப்படத்தில் நடிகை தேவயானிக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக அஜித்துடன் சேர்ந்து சிறப்பாக நடித்து அசத்தி இதன் பிறகு அவருக்கு தமிழ் திரை உலகில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தது.

காதல் கோட்டை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இவர் சிறப்பாக நடித்ததால் இவரது பெயர் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் பேசப்பட்டது. டாப் நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக மாறினார்.

ஹீரோயினாக தன்னை தக்கவைத்துக் கொள்ள தேவயானியும் தொடர்ந்து கிராமத்து கதைகளை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து மக்களுக்கு விருந்து படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐட்டம் டான்ஸ் ஹீரோயினாக சினிமா உலகில் வலம் வருவது மிகப்பெரிய விஷயம் அதை தனது போராட்டத்தின் மூலம் வென்று காட்டியவர் தேவையானி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version