நடிகை சமந்தா சினிமா உலகில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாக செய்து வந்த வேலை என்ன தெரியுமா.?

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தெலுங்கில் சகுந்தலம் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் என இந்த இரண்டு திரைப்படங்களின் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.  சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெரிய அளவில் நடிக்காமல் இருந்து வந்த சமந்தா.

தற்போது இந்த திரைப்படத்தில் நடிப்பதால் அந்த படத்திற்கான வரவேற்பு அதிகமாக எகிறி உள்ளது மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிப்பதால் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தனது திறமையை காட்டி வருகின்றனர்.  சினிமாவில் சிறப்பாக ஓடினாலும் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து தான் வந்துள்ளார்.

நான்கு வருடங்களாக நாக சைதன்யாவுடன் சிறப்பாக வாழ்ந்து வந்த இவர் இடையில் சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளனர். அதை சமந்தாவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் சமந்தாவை தொடர்ந்து கேள்விகள் மூலம்  துளை எடுத்து வருகின்றனர்.

ஆனால் அதற்கு பெரிதாக பதில் கொடுக்காமல் தனது மனநிலையை மாற்றிக்கொண்ட தற்போது சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் நடிகை சமந்தா சினிமா உலகில் நடிக்க வருவதற்கு முன்பாக என்ன வேலை பார்த்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது சமந்தா தனது பொருளாதார வாழ்க்கையை சமாளிக்க..

முதலில் அவர் திருமண விழாக்களில் வரவேற்பு பெண்ணாகத்தான் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது அதன் பிறகுதான் தனது திறமையின் மூலம் படிப்படியாக சினிமா உலகில் ஊடுருவினார். இச்செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருவதோடு சமந்தாவை பாராட்டியும் வருகின்றனர்.