முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மறைவதற்கு முன்பாக கடைசியாகப் பார்த்த படம் என்ன தெரியுமா.? யார் ஹீரோ.?

mgr

திரை உலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் ரசிகர்களை தனது திறமையின் மூலம் மயக்கி போட்டு இருக்கலாம் ஆனால் கோடான கோடி தமிழ் நாட்டு மக்களை பல வருடங்களாக தனது பாசப் இணைப்பின் மூலமும் கவர்ந்து இழுத்தவர் நடிகர் எம் ஜி ராமச்சந்திரன் தான். எம்ஜிஆர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் சூப்பர் ஹிட் அடிக்கும் போதெல்லாம் அவருக்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி கொண்டே இருந்தது.

அதை சரியாக புரிந்து கொண்ட எம்ஜிஆரும் தொடர்ந்து மக்களை கவரும் படியான படங்களிலேயே நடித்து தக்க வைத்துக் கொண்டார் அதன் காரணமாகவோ என்னவோ மக்கள் இவர் எது செய்தாலும் அதற்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர் சினிமாவில் ஓடிக்கொண்டிருந்த எம் ஜி ராமச்சந்திரன் திடீரென முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவித்தார் உடனே மக்களும் அவரை அதில் உட்கார வைத்து அழகு பார்த்தனர்.

அதுவும் ஒரு முறை அல்ல பல முறை அவரை அந்த அரியணையில் உட்கார வைத்தனர் அப்போது பார்த்துகொள்ளுங்கள் எந்த அளவிற்கு மக்கள் அவருக்கு சப்போர்ட்டாக இருந்தனர் என்பதை எம்ஜிஆரையும் நாம் சும்மா சொல்லிவிடக்கூடாது மக்களின் செயல்பாடுகளில் ஏதேனும் குறை இருந்தால் அதை உடனே தீர்த்து வைக்கவும் அவர் ரெடியாக இருந்தார் இவரது ஆட்சிக்காலம் அப்பொழுது மக்களுக்கு சிறப்பான ஆட்சி காலமாக பார்க்கப்பட்டது மக்களுக்கும், சினிமாவுக்கும் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்கொண்டார் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் எம்ஜிஆர் இறப்பதற்கு முன்பாக கடைசியாகப் பார்த்த படம் என்ன என்பது குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தீவிர ரசிகராக இருந்தவர் நடிகர் சத்யராஜ் அவரை வைத்து பாரதிராஜா வேதம் புதிது என்ற ஒரு படத்தை எடுத்து இருந்தார் இந்த படம் ஜாதி பிரச்சனை படம் என்பதால் தணிக்கை குழு இந்த படத்தை வெளியிட முடியாது என கூறியது.

இதனால் மொத்த படக்குழுவும் திக்குமுக்காடி போனது அப்பொழுது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் இயக்குனர் பாரதிராஜாவிடம் போன் காலில் பேசி உங்களுடைய படத்திற்கு ஏதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டேன் படத்தை விசாரித்து பார்க்கவேண்டும் உடனே ஏற்பாடு செய்யுங்கள் என கூறினார் அதன்பின் எம்ஜிஆர் படத்தை பார்க்க பாரதிராஜா மற்றும் சத்யராஜ் ஏற்பாடு செய்தனர் படத்தை பார்த்துவிட்டு சத்யராஜின் கையை முத்தமிட்டு பாராட்டினார் எம்ஜிஆர்.

பின் படக்குழுவுக்கு நல்ல தகவல் சொல்லும் படி எம்ஜிஆர்  வேதம் புதிது ரிலீஸ் தேதியை அறிவித்துவிடு படம் ரிலீஸாகும் என கூறினார். படம் வெளிவருவதற்கு முன்பே டிசம்பர் 24ஆம் தேதி 1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் தமிழக மக்களை விட்டு பிரிந்தார் இதனால் எம்ஜிஆர் கடைசியாகப் பார்த்த படம் வேதம் புதிது என தெரியவந்துள்ளது அவர் மறைந்தாலும் அவர் சொன்னபடி டிசம்பர் 27ஆம் தேதி வேதம் புதிது படம் ரிலீஸாகி ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.