புரூஸ் லீ -ன் உயிரை பறித்தது எது தெரியுமா.? 50 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்.

சினிமா உலகில் இருக்கும் டாப் நடிகர்கள் பலரும் இப்பொழுது உடம்பை பிட்டாக வைத்துக் கொண்டு ஓடுகின்றனர். ஆனால் 70 களில் உடம்பை பிட்டாக வைத்துக் கொண்டு உலகையே ஆச்சரியப்பட வைத்தவர் புரூஸ் லீ. சீன வம்சாவளியை சேர்ந்த புரூஸ்லி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோவில் பிறந்தார்.

ஆரம்பத்தில் இருந்து குங் பூ கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார் தான் நடிக்கும் படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் அதை பெரிய அளவில் வெளிப்படுத்தி பிரபலமும் அடைந்தார். புரூஸ் லீ முதலில் 1979 ஆம் ஆண்டு தி பிக் பாஸ் என்ற படத்தில் நடித்து அசத்தினார். அந்த படம் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது ஆசியாவில் மட்டுமே இந்த திரைப்படம் 12 மில்லியன் டாலர்கள் வரை வசூலித்ததாம்.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொல்லித்தார் கடைசியாக இவர் தி டிராகன் என்கின்ற திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படம் வெளி வருவதற்கு முன்பாகவே புரூஸ் லீ இந்த மண்ணை விட்டு போனார். இவரது மரணம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகிய வண்ணமே இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் இவரின் மரணம் குறித்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு கிளினிக்கல் ஜர்னல்  என புத்தகம் வெளியிட்டு இருக்கிறது. புரூஸ்லீயின் மூளை பெரியதாகி இறந்ததாக கூறப்படுகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. புரூஸ் லீ உடற்பயிற்சிக்காக அதிக புரோட்டீன்கள் எடுப்பார் அதனால் தாகம் காரணமாக அதிக தண்ணீரை எடுத்துள்ளார் அதிகப்படியான தண்ணீரை சிறுநீராக பிரிக்கும் சக்தியை அவரின் சிறுநீரகம் பெற்றிருக்கவில்லை.

இதன் விளைவாக மூளையில் நீர் வீக்கம் ஏற்பட்டு எடை கூடி உள்ளது மனிதனின் மூளை சராசரியாக 1400 கிராம் இருக்கும் புரூஸ்லீயின் மூளை 1575 கிராமமாக பெரியதாகிவிட்டதாம். இதனால் அவருக்கு திடீர் இறப்பு ஏற்பட்டுள்ளது. இது அவருடைய பிரேத பரிசோனையில் தெரிய வந்துள்ளது என அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment