துப்பறிவாளன் 2 திரைப்படத்தை அப்படியே போட்ட விஷால் என்னதான் ஆச்சு தெரியுமா.?

விஷால் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி கடந்த 2017 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் தான் துப்பறிவாளன் இந்த திரைப்படத்தை  அட்டகாசமாக இயக்கியிருப்பார்கள் மேலும் இந்த திரைப்படத்தில்  டிடெக்டிவ் அதிகாரியாக விஷால்  நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெளியானபோது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இரண்டாம் பாகமாக இயக்குவார்களா என ரசிகர்கள் பலரும் கேட்டு வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆரம்பித்தனர்.

இந்த இரண்டாம் பாகத்தில் விஷால்,பிரசன்னா,ரகுமான் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்தார்கள் லண்டனில் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது கூட ரசிகர்களுக்கு தெரிந்ததுதான் மிஷ்கினுடன் விஷால் வாக்கு வாதம் நடத்தியதால் மிஸ்கின் இந்த திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.

அவர் விலகினாலும் பரவாயில்லை இந்த திரைப்படத்தை நானே இயக்கப் போகிறேன் என அப்பொழுது ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் விஷால் ஒரு அறிவிப்பை பகிர்ந்தார் ஆனால் தற்போது விஷால் படுபிஸியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறாராம்.

ஆம் முதலில் இவர் எனிமி என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இதனைத் தொடர்ந்து இயக்குனர் சரவணன் இயக்கும் ஒரு திரைப்படத்திலும் கார்த்திக் தங்கவேலு இயக்கும் ஒரு திரைப் படத்திலும் நடிக்க உள்ளார் விஷால் இதனை வைத்து பார்த்த ரசிகர்கள் விஷாலை எப்பொழுதுதான் நீங்கள் அந்த திரைப்படத்தை இயக்கப் போகிறீர்கள் என சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டு வருகிறார்களாம்.

vishal3
vishal3

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் அந்த திரைப்படம் எப்படியாவது எடுத்து விடுங்கள் என கூறி வருகிறார்களாம்  மேலும் இந்த தகவல் தற்போது விஷால் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment