துணிவு திரைப்படத்தை பார்த்துவிட்டு ஹச். வினோத் தந்தை சொன்ன பதில் என்ன தெரியுமா.? இதோ பாருங்கள்

காலம் புதியதை நோக்கி ஓட ஓட சினிமாவும் மாறுகிறது அதற்கு ஏற்றார் போல இளம் இயக்குனர்கள் நல்ல கதைகளை தேர்வு செய்து வெற்றி பெறுகின்றனர். அந்த வகையில் ஹச். வினோத் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித்தை வைத்து இயக்கிய திரைப்படம் துணிவு.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வந்தது ஒரு வழியாக படம் வெளிவந்து அதை காப்பாற்றி உள்ளது அஜித்தின் துணிவு படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி செண்டிமெண்ட் அனைத்தும் கலந்து இருந்தது மேலும் இந்தப் படத்தில் அஜித்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்டது.

அதனால் இந்த படம் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்து உள்ளதால் திரையரங்குகளில் இன்னமும் துணிவு படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் பட குழுவும் சரி, நடிகர் அஜித்தும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இதுவரை மட்டுமே அஜித்தின் துணிவு திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. தமிழகத்தில் மட்டுமே இதுவரை 118 கோடி அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை இயக்குனர் ஹெச். வினோத்தின் அப்பா ஹரி மூர்த்தி ராஜா அவர்கள் படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது ரசிகர்கள் அவரை சந்தித்து உங்களது மகன் வினோத் இயக்கிய படம் எப்படி இருக்கிறது என கேட்க பதில் நீங்கள் தான் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார் இந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

Leave a Comment