தளபதி 65 திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதைப் பற்றி வித்யூத் என்ன விளக்கமளித்துள்ளார் தெரியுமா.?

தளபதி விஜய் நடிப்பில் உருவாக உள்ள 65 திரைப்படம் அடுத்த மாதம் எடுக்க உள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் கிடைத்தது மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு மற்றும் அனிரரூத் இசையமைக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அபர்ணா தாஸ்,விடிவி கணேஷ் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்களாம்.

இதனையடுத்து சமீபத்தில் தான் இந்தத் திரைப்படத்திற்காக பூஜை நடத்தப்பட்டது படம் எப்பொழுது எடுப்பார்கள் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள் அதை விட இந்த படத்தில் யார் விஜய்க்கு வில்லனாக நடிக்கப் போகிறார் என கேள்வி எழுப்பி வந்த நிலையில் பலரும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால் தான் வில்லனாக நடிக்க உள்ளார் என கூறி வந்தார்கள்.

இதனை அறிந்த வித்யூத் ஜமால் தனது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் ஆம் அதில் அவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு மறுத்துள்ளார் என தெரிவித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் ஐயம் வெயிட்டிங் என கூறி ரசிகர்களை மகிழ்ச்சி படித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வித்யூத் ஜமால் துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment