மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் மற்ற மொழிகளிலும் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியை ருசித்து உள்ளதால் ஒரு மிகப்பெரிய வரவேற்பு தென்னிந்திய சினிமா உலகில் இருக்கிறது.
மேலும் சினிமா உலகில் தொடர்ந்து இவரது திரைப்படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துல்கர் சல்மான் மேலும் பல்வேறு சிறப்பான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் துல்கர் சல்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் மேலும் சூப்பர் ஹீரோ என்றும் கூறியுள்ளார் அவர் அவ்வாறு கூறினால் என்ன காரணம் தெரியுமா. சல்மான் சமிபத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்து கண்டுகளித்து உள்ளார்.
அதில் அவரது நடிப்பு வேற லெவல் வாத்தி கம்மிங் பாடலில் இடம்பெற்றுள்ள ஒரு நீண்ட நடனமாடும் ஷாட்டுக்கு ஈசியாக ஆடி அசத்தியிரந்தார் நான் பார்த்து வியந்து விட்டேன். அப்படி ஆடுவது மிகவும் கஷ்டம் என்பது எனக்கு தெரியும் எனக்கு நடனமே வராது ஆனால் இவரோ மிக சாதாரணமாக ஆடி உள்ளார்.
படத்தில் உள்ள பாடல் கேற்றவாறு நடனமாட எத்தனை டேக் கெடுப்பார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் ஆனால் அதை சாதாரணமாக செய்து காட்டுகிறார் விஜய் அவர் நடனத்தை பார்த்து நானே அசந்துவிட்டேன் அவர் ஒரு சூப்பர் ஹீரோ என கூறி பேசினார் துல்கர் சல்மான்.