மக்களை கவர்ந்த பிரபல விஜய் டிவி சீரியல் முடிய போகிறது.? எந்த சீரியல் தெரியுமா.? வெளியான பரபரப்பு தகவல்.

vijay-tv-serial
vijay-tv-serial

சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகளில் குடும்ப மற்றும் இல்லத்தரசிகளின் பொழுது போக்கிற்காக பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக  டிஆர்பி யில் முதல் இடத்தில் வகிப்பது சீரியல்கலே ஆகும்.

இதில் டிஆர்பி யில் பெரும்பாலும் முதல் இடத்தில் வகிப்பது விஜய் டிவி தொலைக்காட்சியின் சீரியல்களான பாண்டியன் ஸ்டோர், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீசன்2, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் ஆகும்.  அதிலும் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து பல வாரங்களாக தமிழக சீரியல்களிலே முதல் இடத்தில் வகித்து வந்தன.

இந்த தொலைக்காட்சியில் மதியம் தொடங்கி இரவு வரை பல சூப்பர் ஹிட் சீரியல்களை வழங்கி வருகின்றன. இந்த சீரியல்கள் பெரும்பாலும் குடும்ப கதை அல்லது காதல் கதை போன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளைக் கொண்டு நடத்தி வருவதால் மக்கள் பெரும்பாலும் சீரியலையே விரும்பி பார்க்கின்றனர்.

இந்த தொலைக்காட்சியில் சமீபத்தில் முத்தழகு என்ற சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகியது. அதில் கடினமாக உழைக்கும் பெண் ஒன்றின் கதையை மையமாக வைத்து எடுத்துள்ளது போன்று தெரியவந்துள்ளது. ஆனால் இன்னும் அந்த சீரியல் ஒளிபரப்பப்படும் நேரம் அறிவிக்கப்படவில்லை.

அதனால் மக்கள் பலரும் எந்த தொடர் முடிவுக்கு வர உள்ளது என யோசித்து வருகின்றனர். அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதில் வீஜே ஜாக்குலின் ஊராட்சி மன்ற தலைவராகவும் மிகவும் தைரியமான பெண்ணாகவும் நடித்து  வரும் தேன்மொழி பிஏ தொடர் முடிவுக்கு வர உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தொடர் மக்களுக்கு மிகவும் பிடித்த தொடராகும் தற்போது இந்த தொடர் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர்.