சினிமா உலகில் தொடர்ந்து பல்வேறு சூப்பர் படங்களை கொடுத்து அசத்தும் நடிகர்கள் அடுத்தடுத்து படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் நல்ல காசு பார்க்கின்றனர். ஆனால் ஒரு சில பிரபலங்கள் தான் சம்பாதித்த காசை வைத்து தன்னால் முடிந்த சேவைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டாரான மறைந்த நடிகர் புனித் குமார் தன்னால் முடிந்த ஏழைகளுக்கு முடிந்த அளவு காசுகளைக் கொடுத்து சேவை செய்து உள்ளார்.
அதற்காகவே அவர் படங்களில் நடிப்பதையும் தாண்டி பலவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாராம். தயாரிப்பாளர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, பாடகர் என பலவற்றில் தன்னை ஈடுபடுத்தி நன்றாகவே ஓடினார் இது அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்து.
இதன் மூலம் வருகின்ற பணத்தை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் அந்த காசுகளை தான் நடத்தி வந்த சேவை மையங்களுக்கு அனுப்பி மற்றவர்களை வாழ வைத்து உள்ளாராம் இவர் இதுவரை 15 பள்ளிகளை நடத்தி அதில் அனைவருக்கும் இலவச கல்வியை கொடுக்கிறார். 16 முதியவர் இல்லங்கள் போன்ற பலவற்றை தனது சொந்த காசிலேயே நடத்தி வருகிறார் இதோடு மட்டுமல்லாமல் 1,800 பள்ளி மாணவர்கள் படிக்க வழிவகை செய்துள்ளார்.
புனித்குமார் இலவச பள்ளி, அனாதை இல்லம், முதியோர் இல்லம் என கர்நாடக மக்களுக்காக தொடர்ந்து சேவையை செய்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடி கொண்டிருந்த இவர் கடந்த ஆண்டு இயற்கை எய்தியது. இச்செய்தி கன்னட சினிமாவையும் தாண்டி இந்திய சினிமாவையே ஆட்டம் காண வைத்துவிட்டது.

புனித் குமார் இயற்கை எய்தியதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரில் உள்ள அவரது சொந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும் என அந்த ஊர்க்காரர்களிடம் கேட்டுக் கொண்டாராம் அதன்படி ராஜ்குமாரின் ஆசைக்கு இணங்க அந்த ஊர்க்காரர்கள் அந்த வீட்டை நினைவிடமாக தற்பொழுது மாற்றியே பராமரித்து உள்ளனர் இதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது மேலும் இங்கு அருங்காட்சியகமும் வர இருக்கிறதாம்.