பிக்பாஸ் பிரபலம் தாமரைச்செல்வியின் கணவர் இப்போ என்ன வேலை செய்து வருகிறார் தெரியுமா.? வைரல் புகைப்படம் இதோ.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி சீசன் சீசனாக நடந்து வருகிறது அதில் தற்போது நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசன் இதுவரை நடந்த சீசன்களில் இருந்து சற்று வேறுபட்டு காணப்படுகின்றன.

அது என்னவென்றால் இந்த நிகழ்ச்சியில் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவருமே குழுவாக சேராமல் தனித்தனியாக விளையாண்டு வருகின்றன. மேலும் போட்டி நேரத்தில் அவர் அவர்கள் அவர்களுக்காக தனியாக விளையாண்டு வந்தாலும் மற்ற நேரங்களில் ஒற்றுமையாக காணப்படுகின்றன. மேலும் இந்த சீசன் மக்களுக்கு மிகவும் பிடித்த சீசனாக பார்க்கப்படுகிறது.

இந்த சீசன் தற்போது 80 நாட்களைக் கடந்து இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இதில் இந்த வாரம் மக்கள் மற்றும் போட்டியாளர்கள் என பலருக்கும் பிடித்த ஃரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின்  குடும்ப உறுப்பினர்கள் சர்ப்ரைஸாக வந்து போட்டியாளர்களை மகிழ்வித்து வருகின்றன. தற்போது இந்த நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

அதில் ஒருவரான தாமரைச்செல்வி இவர் நாடகத் துறையிலிருந்து  வந்து இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து காணப்படுகிறார் மேலும் இவர் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் வந்து இருந்தாலும் தற்போது இவர் இந்த நிகழ்ச்சி பற்றி நன்றாக புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார்.

மேலும் நேற்று தாமரையின் மகன் மற்றும் கணவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர் அவர்களைப் பார்த்து மற்றும் பேசியதில் தாமரை மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் தாமரையின் கணவர் பார்த்தசாரதி தாமரைக்கு பூவெல்லாம் வைத்துவிட்டார். தற்போது இவர்கள் குறித்து வெளிவந்த தகவல் என்னவென்றால் தாமரையின் கணவர் ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று  இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.

dhamarai
dhamarai

Leave a Comment