ரஜினியின் அடுத்த திரைப்படத்தை பற்றி பிரபல இயக்குனர் என்ன பகிர்ந்துள்ளார் தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் பலஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கடினமாக உழைத்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர்.

ரஜினி நடிப்பில் எந்த திரைப்படம் வெளிவந்தாலும் அந்தத் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் ஹிட்டாகும் ஆனால் ரஜினி நடிக்க ஆரம்ப காலகட்டத்தில் அவரது திரைப்படங்கள் சரியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை இருந்தாலும் தனது விடா முயற்சியினால் அடுத்தடுத்த திரைப்படங்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டார் ரஜினி.

மேலும் ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தா என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் ரஜினியுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் மீனா, குஷ்பூ,கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா போன்ற பல்வேறு முக்கிய நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

இதனையடுத்து ரஜினி தனது 169 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அல்லது தேசிங் பெரியசாமி ஆகிய இருவர்களின் ஒருவர் ரஜினியின் 169 திரைப்படத்தை இயக்கப் போவதாக கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது.

இந்த தகவலை அறிந்த தேசிங் பெரியசமி இயக்குனர் அது குறித்து ஒரு பதிவை சமீபத்தில் பகிர்ந்தாராம் அதில் தனது அடுத்த திரைப்படம் பற்றிப் பரவி வரும் அனைத்து தகவலுமே மிகவும் பொய்யானது எனது அடுத்த திரைப்படத்தை பற்றி நானே விரைவில் அறிவிப்பேன் என கூறி இருந்தாராம்.

rajini
rajini

அதுமட்டுமல்லாமல் உங்களது பேர் ஆதரவுக்கு எனது கோடி கோடியான நன்றி எனவும் தேசிங் பெரியசமி பதிவு செய்ததாக ஒரு தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதனை வைத்துப் பார்க்கும் பொழுது தேசிங் பெரியசமி ரஜினியின் திரைப்படத்தை இயக்க வில்லை என்பது மட்டும் தெரிய வருகிறது ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவலா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.