வீரம் திரைப்படத்தில் தல அஜித்துடன் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.?

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே பல கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.மேலும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் ஒன்றுதான் வீரம்.

தல அஜித் நடிப்பில் தமன்னா மற்றும் சந்தானம்,நாசர்,தம்பி ராமையா போன்ற பல பிரபலங்களின் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.அந்த வகையில் பார்த்தால் இந்த திரைப்படத்தில் தல அஜித் நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டாத சினிமா பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு இந்த திரைப்படம் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டது.

மேலும் இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தான் யுவினா பார்த்தவி இவர் ஸ்ட்ராபெரி,மாஸ் என்கிற மாசிலாமணி,சர்க்கார் போன்ற பல திரைப்படங்களில் பல முக்கியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ளார்.

மேலும் இவர் தற்போது குழந்தையாக இல்லாமல் கதாநாயகி அளவிற்கு புகைப்படங்களையும் வெளியிட ஆரம்பித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.அதாவது இவர் தற்பொழுது குழந்தை நட்சத்திரமாக இல்லாமல் ஒரு முக்கிய திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் மட்டும் கதாநாயகியாக நடித்து விட்டால் எங்களுக்கு மிகவும் பிடித்து விடும்.இவரது நடிப்பு குழந்தையாகவே இருக்கும் பொழுது மிகவும் நன்றாக இருந்தது இவர் மட்டும் தற்பொழுது கதாநாயகியாக நடிக்க வந்தால் இவர்தான் அடுத்த நயன்தாரா என்று இவரை உற்சாகப்படுத்தும் வகையில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment