அஜித்,கமலை பற்றி தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவ் என்ன சொன்னார் தெரியுமா.!விவரம் இதோ!!

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கோரோனா வைரஸ். சீனாவிலுள்ள ஹீபெய்  தலைநகரான வுஹான் நகரிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது. இதனை தடுக்க சீன அரசாங்கம் மற்றும் உலக சுகாதார மருத்துவம் சேர்ந்து இதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த வைரஸ் தற்போது 24 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்பொழுது இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து உள்ளது இந்த நிலையில் இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் கல்லூரி, பள்ளி, வளாகம், திரையரங்கம் போன்றவை மூடப்பட்டுள்ளன. ஆனால் பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

அதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உங்களால் முடிந்த நிதி உதவியை அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். இதனை அடுத்து மக்களால் முடிந்த நிதி உதவி மற்றும் நிவாரணப் பொருட்களையும் அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வரின் கோரிக்கையை ஏற்று சிவகார்த்திகேயன் 15 லட்சம் நிதி அளித்தார், அவரைத் தொடர்ந்து தல அஜித் அவர்கள் 50 லட்சம் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் 50 லட்சமும் மற்றும் பெப்சி தொழிலாளர்களை ஐந்து லட்சமும் நிதியாக அளித்திருந்தார்.

kadambur-raju
kadambur-raju

இந்தநிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் அஜித்தின் இந்த செயலை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் மத்திய மாநில அரசின் நடவடிக்கையை விமர்சித்து பேசிய கமலை விமர்சித்தார். உங்களிடம் நல்ல யோசனை இருந்தால் கூறுங்கள் விமர்சனம் செய்வதற்கு இது நேரமில்லை என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment