சினிமாவையும் தாண்டி நெப்போலியன் செய்யும் வேலை என்ன தெரியுமா.? வைரல் நியூஸ்.

தமிழ் திரை உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின்னாட்களில் ஹீரோ, வில்லன் போன்ற ரோல்களில் சிறப்பாக கையாண்டு வெற்றி நடை கண்டு வருபவர் நெப்போலியன். இதுவரையிலும் 70 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் மேலும் தனது பயணத்தை நிறுத்தி கொள்ளாமல் தற்போதும் ஓரிரு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வலம் வருகிறார்.

இவரை முதன் முதலில் சினிமாவுக்கு இழுத்து வந்தவர் என்று இயக்குனர் பாரதிராஜா தான். இவரது உண்மையான பெயர் குமரேசன் ஆனால் படத்திற்கு அது பொருந்தாது என்பதால் நெப்போலியன் என பெயர் வைத்தார்.

இதற்கு முதலில் இந்த பெயர் நல்லா இல்லை மாற்றுங்கள் என பாரதிராஜாவிடம் கூறினார் ஆனால் பாரதிராஜா உன்னுடைய உடல் வாட்டத்திற்கு இந்த பெயர் சிறப்பாக பொருந்தும் என கூறி அவரை சமாதானப் படுத்தி விட்டார் ஆனால் பின்னாட்களில் அந்த பெயர் மிகப்பெரிய வெற்றியாக மாறியது.

சினிமாவையும் தாண்டி இவர் திராவிட கழகத்தில் இணைந்து அரசியலில் சிறப்பாகவும் பயணித்தார் இப்படி எல்லாவற்றிலும் வெற்றி கண்ட நெப்போலியனுக்கு அவரது குடும்பத்தில் மட்டும் சோகத்தை அளித்தது.

அதுவும் இவரது மூத்த மகனான தனுஷ் என்பவருக்கு இளம் வயதிலேயே மஸ்குலர் ட்ரோபி என்ற ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்த நோய் என்ன செய்யும் என்றால் உடல் அசைவுகளை நிறுத்திவிடும் மேலும் கை கால்களை எதுவும் தூக்க முடியாமல் அப்படியே பிடித்து விடுமாம்.

இதை ஆரம்பத்தில் வீட்டில் இருந்துகொண்டே பார்த்து வந்த நெப்போலியனுக்கு ஒரு கட்டத்தில் சுத்தப்பட்ட வராததால் அமெரிக்கா சென்று  பையனுக்கு சிகிச்சை கொடுத்து வருகிறார் மேலும் அங்கேயே செட்டிலாகி ஜீவன் டெக்னாலஜி என்ற ஐடி கம்பெனியை நடத்திவருகிறார் இதில் சுமார் குறைந்தது 800 பேருக்கு மேல் பணியாற்றி வருகின்றனர்.

Leave a Comment