மறைந்த பிரபலம் வீரப்பனுக்கு” பிடித்த திரைப்படம்” என்ன தெரியுமா.? வெளிவரும் உண்மை தகவல்.!

காடு மலைகளில் வாழ்ந்த வீரப்பன் இவர் இருக்கும் போதும் சரி மறைந்த பிறகும் சரி அவரைப் பற்றி பல்வேறு விதமான படங்கள் மற்றும் கதைகள் எல்லாம் உருவாகி வந்தன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு ஆர் கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் கேப்டன் பிரபாகரன்.

இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், சரத்குமார், ரூபினி, ரம்யா கிருஷ்ணன், லிவிங் ஸ்டண்ட் காலபவன் மணி பிளி சிவம் நம்பியார், நரசிம்மன், காந்திமதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் வீரப்பன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் அப்படியே வீரப்பனாகவே வாழ்ந்திருப்பார் அந்த அளவிற்கு சூப்பரா நடித்தார்.

இந்த படத்தில் வீரப்பனை நல்லவர் போலவே காட்டி இருந்தனர். இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் லியாகத் அலி இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தது என்னவென்றால் அதாவது இந்த படம் வீரப்பனை தழுவி எடுக்கப்பட்ட படமாகும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நீதிமன்றத்தில் விஜயகாந்த்..

வீரப்பன் கெட்டவன் இல்லை சில பேர் லாபத்திற்காக பயன்படுத்தி கெட்டவனாக்கப்பட்டவன் என கூறி இருப்பார். இந்த படத்தில் வீரப்பனை நல்லவனாக தான் சித்தரித்து இருப்பார் லியாகத் அலி. இது முடிந்து இன்னொரு பட சூட்டிங்க்கு விஜயகாந்தை சந்திப்பதற்காக கோபிசெட்டிபாளையம் போயிருந்தார்.

ஷூட்டிங் எல்லாம் முடிந்து பேக்கப் பண்ணி வரும் பொழுது அங்கு குடியிருந்த மக்கள் ஒன்றரை மணி நேரம் வீரப்பன் இங்குதான் நின்னு பார்த்துக் கொண்டிருந்தார் எனவும் கேப்டன் பிரபாகர் படத்தை பார்த்து லியாகத் அலி மேல் வீரப்பனுக்கு ஒரு அன்பு இருந்ததாகவும் சிலர் கூறினர் என அவர் தெரிவித்தார்.

captain prabhakaran
captain prabhakaran

Leave a Comment