“ராட்சசி” பட இயக்குனரின் அடுத்த பட டைட்டில் எந்த மாதிரி உள்ளது தெரியுமா.! கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..

0

நடிகை ஜோதிகாவை வைத்து ராட்சசி என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்தவர் கௌதம் ராஜ். இவே அவருக்கு முதல் திரைப்படம் ஆகும்.

பார்த்தால் அப்படி தெரியவில்லை ஏனென்றால் அந்த அளவுக்கு நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இந்த படத்தை இயக்கியிருந்தார். முதல் படமே இவருக்கு வெற்றி தரும் படமாக அமைந்தது.

அடுத்ததாக இவர் “வீரப்பனின் கஜானா” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, பூஜா, மொட்ட ராஜேந்திரன், ராஜேஷ், தேவா போன்ற பலர் நடிக்கின்றனர்.

பிரபதிஸ் ஷாம்ஸ் உடன் இணைந்து இவர் படத்திற்கான  கதையை எழுதி உள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குனர் கௌதம் ராஜ் கூறியுள்ளார்.

படம் முழுவதும் காட்டு பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது தொலைந்து போன புதையலைத் தேடிய கதை நகர்கிறது.

வீரப்பன் கோணத்தில் காட்டை பார்க்கும் படம் இது. காட்டின் முக்கியத்துவத்தையும் செல்லும்பொழுது காமெடியையும் சொல்லுவதால் இந்தக் கதையை சிறப்பாக அமைந்துள்ளது என கூறினார்.

மேலும் யோகிபாபு இந்த திரைப்படத்தில் புதியலை தேடி நகர்வார் மொட்ட ராஜேந்திரன் தனது தொலைந்து போன குரங்கை தேடி இந்த காட்டிற்குள் வருவார். படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து அவர் ஜோதிகா வைத்து ஒரு திரைப்படத்தை அடுத்ததாக ஒரு படத்தை இயக்க உள்ளார் ஆனால் அதற்கு முன்பாகவே ஒரு ஹீரோவை வைத்து வேறு ஒரு திரைப்படத்தையும் அவர் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.