அண்ணாத்த படம் எந்த மாதிரியான “சென்சார் சான்றிதழ்” வாங்கியுள்ளது தெரியுமா.? புதிய போஸ்டர் உடன் வெளியான தகவல்.

சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது முழுக்க முழுக்க கிராமத்து சப்ஜெக்ட் படத்தில் நடித்து உள்ளதால் அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தை சிறப்பாக ரஜினியுடன் இணைந்து பழைய ஜோடி நடிகைகளான மீனா, குஷ்பு போன்றோர் இணைந்துள்ளனர்.

மேலும் அந்த படத்திற்கான வரவேற்பும்  அதிகரித்துள்ளது. மேலும் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ்சும், ஹீரோயினாக நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா வேற லெவலில் எடுத்துள்ளார். மேலும் பிரமாண்ட பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது.\

இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளியை குறி வைத்துள்ளது. அதற்கு முன்பாகவே இந்த படத்தில் இருந்து அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. சமீபத்தில் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அதை தொடர்ந்து அண்ணாத்த அண்ணாத்த மற்றும் சாரா காயத்ரி ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து தற்போது அண்ணாத்த படத்தின் டீசரும் வெளியாகி மக்கள் மத்தியில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. யூடியூபில் இந்த டீசரை பல லட்சம் பேர் பார்த்து கண்டுகளித்து கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளிவந்துள்ளது.

புதிய போஸ்டர் வெளியீடு UA சான்றிதழ் மற்றும் உள்ளதாக அறிவித்துள்ளது.  இச்செய்தியை தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் வேற லெவல் இல் கொண்டாடி வருகின்றனர் இந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்.

annathaa
annathaa

Leave a Comment