“FRIENDSHIP” படத்தின் பிரமோஷனுக்காக ஹர்பஜன்சிங் கையில் எடுத்துள்ள புதிய ஆஸ்திரம் என்ன தெரியுமா.! தலைவன் எப்போதும் வேறமாதிரி தான் யோசிப்பாரு..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளார் ஹர்பஜன்சிங். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய அவர் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு வந்த பிறகு இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் வளர தொடங்கி அதற்கு காரணம் தமிழில் அவ்வப்போது திருக்குறள் மற்றும் பழமொழிகளை பதிவிட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தார்.

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு இவருக்கு தற்போது வெப்சீரிஸ் மற்றும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் பிக் பாஸ் லாஸ்லியா அவருடன் ஜோடி சேர்ந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படத்தில் இவருக்கு பக்கபலமாக ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் மிக விரைவில் திரையரங்குக்கு வரவிருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் வேலையை செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது அது போல ஹர்பஜன் சிங்கும் தன் பங்கிற்கு படத்தின் புரமோஷன் எந்த அளவிற்கு இறங்கி பரப்ப முடியுமோ பரப்பி வருகிறார் அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு சமீபத்தில் கிரிக்கெட் பிரபலங்கள் ஷில்பா ஷெட்டி உடன் இணைந்து நடனமாடினர் அப்போது ஆடாத ஹர்பஜன்சிங்.

தற்பொழுது தன் படத்தின் பிரமோஷனுக்காக விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடி அசத்தினார் இதுவே படத்தின் புரமோஷனுக்காக முதல் வேலையாக பார்க்கப்படுகிறது.

harbhajan singh
harbhajan singh

அப்படிப் பார்த்தால் இன்னும் பல ஆட்டம் போடுவார் என தெரிகிறது. இப்படியே போனால் படத்தின் பிரமோஷனில் விஜய்யை ஓரம் கட்டிவிடுவார் ஹர்பஜன்சிங் என்று பலர் கூறிக் கொண்டும் வருகின்றனர்.

Leave a Comment