துருவ நட்சத்திரம் திரைப்படத்தைப் பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா அது.!

0

விக்ரம் தற்போது சினிமாவில் மிகவும் படு பிசியாக நடித்து வருகிறார் என்று தான் கூற வேண்டும் இவரைப் போலவே இவரின் மகனும் தற்பொழுது நிறைய திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடிப்பதற்கு போராடி வருகிறார்  விக்ரம் நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருவது மட்டுமல்லாமல் பலரும் இவரது திரைப்படங்களை விரும்பிப் பார்த்து வருகிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம் இவர் தில்லாக பேசும் பேச்சு தான் சேது திரைப்படம் வரை இவரை ராசியில்லாத நடிகர் என பலரும் கூப்பிட்டு வந்தார்கள் ஆனால் சேது திரைப்படத்தில் நடித்து நானும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் என காட்டிவிட்டார் சேது திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் கூற வேண்டும்.

அதேசமயம் இவரது நடிப்பில் வெளியாகமல் ஒரு சில திரைப்படங்கள் இருக்கிறது ஆம் கௌதம் மேனன் இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பே வெளியாக வேண்டிய திரைப்படம் தான் துருவ நட்சத்திரம் இந்த திரைப்படத்தின் 90 சதவீத காட்சிகள் மட்டும் முடிந்த நிலையில் மீண்டும் எப்பொழுது படப்பிடிப்பு தொடங்கும் என பலரும் கேட்டு வந்தார்கள்.

ஆனால் இந்த திரைப்படத்தை பற்றி தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது அதில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக படக்குழு வெளியிட உள்ளதாகவும் இப்படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை மட்டுமே வைத்து முதல் பாகத்தை வெளி விட்டு பின்பு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக இந்த தகவல் வைரலாகி வருகிறது.

vikram0
vikram0

ஆனால் கௌதம் மேனன் நிறைய திரைப்படங்களில் இயக்குனராகவும் நடிகராகவும் செம பிஸியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் எப்படி உருவாகும் என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.