தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுபவர் தல அஜித் இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார். மேலும் தல அஜித் திரைப்படங்கள் சமீபகாலமாக மாபெரும் ஹிட்டடித்த வருகிறது அதிலும் 2019ஆம் ஆண்டு வெளியாகிய நேர்க்கொண்ட பார்வை மற்றும் விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது.
அதன் பிறகு அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆனால் அந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன இந்த மாதம் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார் வினோத் படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் நீரவ்ஷா ஒளிப்பதிவு பணியாற்றிவருகிறார்.
இந்தநிலையில் அஜித் சமீபகாலமாக பிளாக் அண்ட் வொயிட் முடியுடன் தான் நடித்து வருகிறார் ஆனால் இந்த திரைப்படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் மிகவும் இளமையாக நடித்து வருகிறார் மேலும் வலிமை திரைப்படத்தில் தல அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. தல அஜித்ற்க்கு தான் போலீஸ் கேரக்டர் என்றால் ஹீரோயினுக்கும் போலீஸ் கதாபாத்திரம் என கூறப்படுகிறது.
சமீபத்தில் வலிமை திரைப்படத்திலிருந்து நாங்கள் வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாட வைத்தது. அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார் இந்த நிலையில் வலிமை படத்தின் டீஸருக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் அஜித்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த தல ரசிகர்கள் அனைவரும் செம கோபத்தில் இருக்கிறார்கள் அந்த வீடியோவில் அஜித்தை பார்த்து ஒருவர் ஒரே ஒரு போட்டோ கொடுத்துட்டு போடா என்று தரக்குறைவாக மரியாதை இல்லாமல் பேசியுள்ளார் அதை பார்த்த அஜித் செம கோபத்துடன் பார்க்கிறார். இந்த வீடியோ தல ரசிகர்கள் அனைவரிடமும் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது இதற்கு தல அஜித் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
எதே😂😂ஒரே ஒரு போட்டோ குடுத்துட்டு போடா வா.. pic.twitter.com/hzybx4DD7d
— DON ꜱʜɪɴᴄʜᴀɴ°™💥 (@itzShinChan_) August 30, 2021