கல்லூரி நினைவு பற்றி வருத்தத்துடன் பதிவிட்ட குக் வித் கோமாளி சிவாங்கி என்ன கூறியுள்ளார் தெரியுமா.!

தமிழ் திரை உலகில் சின்னத்திரையில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு பல முன்னணி நடிகர்கள் வளர்ந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தற்போது ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர் தான் குக் வித் கோமாளி சிவாங்கி.

இவர் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் தனது குறும்புத்தனத்தை வெளிப்படையாக காட்டி இருந்ததால் அதிலிருந்த ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்கு அவரிடம் கூறி இருக்கிறார்.

அதற்கு அவர் சொன்ன பதிலை நம்பி சிவாங்கியும் அந்த குக் வித் கோமாளி2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார் ஆம் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளது இதில் கனி என்பவர் டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

shivangi
shivangi

எப்பொழுதும் இந்த நிகழ்ச்சியில் ஜாலியாக இருக்கும் சிவாங்கி தற்பொழுது ஒரு வருத்தமான பதிவை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் ஆம் அதில் அவரது படிப்பு முடித்து விட்டதாகவும் இன்றோடு கடைசி நாள் எனவும் அவர் பதிவு செய்துள்ளார் இதனை சோகத்துடன் பதிவு செய்ததால் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதலை கூறி வருகிறார்கள்.

Leave a Comment