தளபதி விஜய் பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு என்ன காத்திருக்கிறது தெரியுமா.?

பல ஆண்டுகளாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் இளைய தளபதி விஜய் இவர் தற்போது தனது 65வது திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறாரார் இவர் தனது முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியா நாட்டில் முடித்து விட்டார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் என்ற திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்று சாதனை படைத்தது.

அதுமட்டுமல்லாமல் தளபதி தனது 65வது திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்தது ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது தளபதி விஜயின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருவதால் ரசிகர்கள் பலரும் இப்போது அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

தளபதி விஜய்யின் பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய சப்ரைஸ் காத்திருக்கிறது என தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதில் தளபதி பிறந்தநாளான ஜுன் 22ஆம் தேதி அவர் நடிக்கும் தளபதி 66வது திரைப்படத்தைப் பற்றி அப்டேட் வெளியாகும் என இணையதளத்தில் தகவல் கசிந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்க உள்ளாராம் இந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது இதனால் ரசிகர்கள் பலரும் தளபதி விஜயின் பிறந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

vijay 66
vijay 66

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் தளபதி நடிக்கும் 66வது திரைப்படத்தைப் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என நம்புகிறார்கள் இதனையடுத்து இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment