நடிகை சரோஜா தேவி அஜித்தை பற்றி என்ன கூறியுள்ளார் தெரியுமா.? அதுவும் இந்த படத்தை பற்றி என்ன சொன்னார்….

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் தல அஜித். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இவருடன் நடித்த பல நடிகர்கள் மற்றும் நடிகைகள், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவருமே இவரைப் பற்றி உயர்வாக தான் கூறுவார்கள்.

அந்த அளவிற்கு அஜித் மனிதாபிமானம் மற்றும் அவர்களுடன் பழகும் அனைவரையும் உயர்ந்தவர்களாக எண்ணி மரியாதையுடன் தான் பேசுவாராம். இவ்வாறு அஜித்தை பாராட்ட அவர்கள் என்று எவரும் இல்லை. இந்த நிலையில் தற்போது இவர் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். .

சினிமாவில் பல நடிகைகள் தல அஜித்துடன் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்து வருகிறார்கள். இவ்வாறு தனது கடின உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் திரை உலகில் கலக்கு கலக்கி வந்து கொண்டிருக்கும் தல அஜித்தை பற்றி பழைய பிரபல நடிகையான சரோஜாதேவி பேட்டியில் ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார்.

அதாவது சரோஜாதேவி ஒரு பேட்டியில் தல அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் நடித்த படங்களில் என்னை அறிந்தால் படத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது இப்படத்திற்கு பிறகு தல அஜித்தின் ரசிகர்களில் ஒருவராக நானும் இருந்து வருகிறேன் என்று புகழ்ந்து தல அஜித்தை பற்றி கூறியிருந்தார்.

இதனை அறிந்த ரசிகர்கள் சரோஜாதேவி நம் தல அஜித்தை பற்றி இப்படி புகழ் உள்ளாரே என்று உற்சாகத்தில் மகிழ்ந்து வருகிறார்கள்.