தமிழ் சினிமாவில் சமீப காலமாக புதுமுக நடிகரின் வரவேற்பு அதிகரித்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்தவகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கு தமிழ் சினிமா வாய்ப்பு கொடுத்து அவரையும் உருவாக்கி உள்ளது.
பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது ஹர்பஜன் சிங் தற்போது லாஸ்லியாவுடன் ஜோடி சேர்ந்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர் சதீஷ் மற்றும் ஆக்ஷனுக்கு பேர்போன ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் காதல் மற்றும் சண்டை காட்சிகள் அமைந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
படம் முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசாக ரெடியாக இருக்கின்றது. இந்த நிலையில் இந்த படம் குறித்து ஒரு சூப்பரான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது அதாவது இந்த படத்தில் ஹர்பஜன்சிங்குக்கு குரல் கொடுத்தவர் பிரபல நடிகர் சிம்புதான் என தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிம்பு தன் படத்தையும் தாண்டி மற்றவர்களுக்காகவும் உதவி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவருக்கு குரல் கொடுத்துள்ளது ரசிகர்களை சந்தோஷம் அடைய வைத்துள்ளது.